ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்ட பதிவு… எந்த படத்திற்கான அப்டேட்?

நாளை முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் அறிவித்துள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் அமரன் மற்றும் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கி வரும்…

நாளை முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் அறிவித்துள்ளது.

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் அமரன் மற்றும் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கி வரும் தக்லைப் ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன.

மேலும் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் எஸ்டிஆர் 48 படமும் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஸ்டன்ட் இயக்குனர்கள் அன்பறிவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படமும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்றுமுன் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் ‘இந்த புதன்கிழமை’ என்று மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து நாளை இந்நிறுவனத்தின் தயாரிப்பு உருவாக இருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.