பாஜக பிரமுகர் வீடு மீது பெட்ரோல் குண்டுவீச்சு?

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியில் நள்ளிரவில் பாஜக பிரமுகர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுவீச்சப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் , பட்டிவீரன்பட்டி அண்ணா நகர் மேற்கு தெருவை சேர்ந்தவர் கல்யாணி. இவர்…

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியில் நள்ளிரவில் பாஜக பிரமுகர்
வீட்டின் மீது பெட்ரோல் குண்டுவீச்சப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் , பட்டிவீரன்பட்டி அண்ணா நகர் மேற்கு தெருவை சேர்ந்தவர் கல்யாணி. இவர் பாஜக கிளை தலைவராக உள்ளார். மேலும், ஆட்டோ ஓட்டுனராகவும் உள்ளார். இந்நிலையில் , நேற்று இரவு கல்யாணி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது , நள்ளிரவில் பலத்த சப்தம் கேட்டு எழுந்து பார்த்தார். அப்போது, அவரது வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. .

இதில், வீட்டின் முன்புற பகுதியில் ஜன்னல், மின்சாதன பெட்டி தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக வீட்டின் வெளியே வந்த கல்யாணி தீயை அணைத்தார். இதுகுறித்து, கல்யாணி பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு நிலக்கோட்டை டிஎஸ்பி முருகன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், தனிப்படை காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். வீசப்பட்டது பெட்ரோல் குண்டா அல்லது வேறேதும் வெடிபொருளா? என்றும், வீசிய மர்ம நபர்கள் யார் ? , அரசியல் கால்புணர்ச்சியா ? , முன்விரோதமா என்கிற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடியும் வருகின்றனர்.

—கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.