காரைக்குடியில் பிரம்மாண்டமாக தொடங்கியது நியூஸ் 7 தமிழின் “ஊரும் உணவும் திருவிழா”

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் “ஊரும் உணவும் – இது உங்க ஊர் திருவிழா”   காரைக்குடியில் உள்ள பாண்டியன்  மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கியது. தமிழ்நாட்டின் பல்வேறு பாரம்பரிய உணவு வகைகளை ஒரே இடத்தில்…

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் “ஊரும் உணவும் – இது உங்க ஊர் திருவிழா”   காரைக்குடியில் உள்ள பாண்டியன்  மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கியது.

தமிழ்நாட்டின் பல்வேறு பாரம்பரிய உணவு வகைகளை ஒரே இடத்தில் சங்கமிக்க வைக்கும் வகையில் ஊரும் உணவும் திருவிழாவை நியூஸ் 7 தமிழ் நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்தாண்டு ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மதுரையில் முதன் முதலாக ஊரும் உணவும் திருவிழா நடைபெற்றது.

இந்த திருவிழாவில் உணவு வகைகள் மட்டுமின்றி பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் போட்டிகளும் நடத்தப்பட்டன. நியூஸ் 7 தமிழின் இந்த புதிய முயற்சிக்கு மதுரை மக்கள் அமோக ஆதரவு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஓசூரில் கடந்த பிப்ரவரி 18 மற்றும் 19 ஆகிய இரு நாட்கள் நியூஸ் 7 தமிழ் சார்பில் ஊரும் உணவும் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

இந்த நிலையில் “ஊரும் உணவும் – இது உங்க ஊர் திருவிழா” என்ற பெயரில் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் சிவகங்கை மாவட்டம்  காரைக்குடியில் உள்ள பாண்டியன்  மைதானத்தில் இன்றும்,  நாளையும் ( ஏப்ரல் 8 மற்றும் 9 ) உணவுத் திருவிழா நடைபெறுகிறது. கட்டணம் எதுவுமில்லாமல் இலவசமாக இந்த உணவுத் திருவிழாவில் பங்கேற்கலாம்.

இன்று காரைக்குடியில் தொடங்கிய ஊரும் உணவும் திருவிழாவை காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.ஸ்டாலின் மற்றும் சிவசக்தி புரோமோட்டர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் சிவசக்தி பாண்டியன் ஆகியோர் ரிப்பன் வெட்டி  திருவிழாவை தொடங்கி வைத்தனர்.

தமிழகத்தின் பாரம்பரிய உணவு வகைகள் காரைக்குடி பாண்டியன் திடலில் ஒரே இடத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த உணவு திருவிழாவில் காரைக்குடி மக்கள் அதிகளவில் பங்கேற்று வரவேற்பு அளித்து வருகின்றனர்.

உணவுத் திருவிழாவில் இடம்பெறும் உணவு வகைகள்:

  • தூத்துக்குடி மக்ரூன்
  • கிருஷ்ணகிரி நைஸ் பால்கோவா
  • காரமடை தேர் மிட்டாய்
  • சீர்காழி பருத்தி பால் அல்வா
  • தூத்துக்குடி கருப்பட்டி இனிப்புகள்
  • காரைக்கால் அல்வா மற்றும் ஜாமூன்
  • தஞ்சாவூர் அசோகா அல்வா
  • திண்டிவனம் முட்டை மிட்டாய்
  • சேலம் மற்றும் கரூர் தட்டு வடக்கடை
  • அலங்காநல்லூர் பால் பன்
  • திருச்சி அக்கார வடிசல்
  • சேலம் மூலிகை தந்தூரி டீ
  • ஊத்துக்குளி வெண்ணெய், ஹனி பீடா
  • அம்பாசமுத்திரம் அரிசி அப்பளம்
  • ஊட்டி வறுக்கி
  • மார்த்தாண்டம் தேன்
  • உடுமலை பருப்பு சாதம்
  • ஒகேனேக்கல் மீன் சாப்பாடு
  • ஆம்பூர் பிரியாணி
  • பள்ளிபாளையம் சிக்கன், கருப்பு கவுனி ஐஸ்கிரீம்
  • மணப்பாறை முறுக்கு
  • தஞ்சாவூர் சந்திரகலா, 25 வகை சர்பத்
  • நெல்லை இடியாப்பம் சொதி
  • திருப்பத்தூர் மக்கன்பேடா
  • திண்டுக்கல் வாழை இலை பரோட்டா
  • கீழக்கரை துதல் அல்வா
  • ஊட்டி ஹோம் மேட் சாக்லேட்ஸ்
  • திண்டுக்கல் சீரகசம்பா பிரியாணி
  • மதுரை முயல் கறி
  • நாமக்கல் முட்டை
  • ஊத்துக்குளி வெண்ணெய்
  • பண்ருட்டி முந்திரி
  • பாண்டிச்சேரி கமரக்கட்டு
  • சேலம் ஜவ்வரிசி இனிப்புகள்
  • நாகை பனங்கிழங்கு கேக்
  • கரூர் கரம்ஸ்
  • மாஞ்சோலை டீ உள்ளிட்ட உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.