காரைக்குடி அருகேப் பள்ளத்தூர் மதுபானக் கடையில் கடந்தச் சில வாரங்களுக்கு முன்பு பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் அதேக் கடையில் குண்டுவீசிய மா்ம நபா்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூரில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடையில் கடந்தச் சில வாரங்களுக்கு முன்பு பெட்ரோல் குண்டு வீசிவிட்டு குற்றவாளி கள் தப்பித்து ஓடினர். இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், மீண்டும் அதே மதுபானக் கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் அரசு மதுபானக் கடையின் விற்பனையாளர்களில் ஒருவரான அர்ஜுனன் என்பவர் காயம் அடைந்து காரைக்குடி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மதுபான பாட்டில்கள் மற்றும் பணம் வைக்கப்பட்ட பெட்டியில் இருந்த ரொக்கப் பணம் உள்ளிட்டவை எரிந்து சாம்பலாயின. அடுத்தடுத்து மீண்டும் தொடர்ச்சியாக நடைபெற்ற இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
–கே.ரூபி