பாஜகவிலிருந்து விலகிய நிர்மல் குமாருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜவின் அணைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும் சிந்திக்காது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவும் இல்லை. அதையும் தாண்டி தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள், கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்களையும் வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்தது தான் மிச்சம். இவ்வாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
அண்மைச் செய்தி :இடிக்கி அருகே கேரள அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து
பாஜகவிலிருந்து விலகிய சிடிஆர். நிர்மல் குமார் பாஜகவில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் அதிமுகவில் இணைந்துள்ள நிர்மல் குமாருக்கு பாஜக மாநில தலைவர் நிர்மல் குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், “அன்பு சகோதரர் சிடிஆர் நிர்மல் குமாருக்கு வாழ்த்துகள். நீங்கள் எங்கு சென்றாலும் உங்களது பணி சிறக்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.