30 ரூபாய்க்காக கொலை செய்த நபர்!

மதுரையில் மது அருந்த 80 ரூபாய் பணம் தராத கோவத்தில் இருவரை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை ஒத்தக்கடை மலைச்சாமிபுரம் பகுதியை சேர்ந்த சதிஸ்குமார்  என்ற இளைஞர் மது அருந்துவதற்காக…

மதுரையில் மது அருந்த 80 ரூபாய் பணம் தராத கோவத்தில் இருவரை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை ஒத்தக்கடை மலைச்சாமிபுரம் பகுதியை சேர்ந்த சதிஸ்குமார்  என்ற இளைஞர் மது அருந்துவதற்காக கடந்த 11ம் தேதியன்று உத்தங்குடி பகுதியை சேர்ந்த இதயத்துல்லாவிடம் 30 ரூபாய் பணம் கேட்டு தர மறுத்த நிலையில் கல்லைப்போட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இதேபோல் அதற்கு அடுத்த நாளே ஒத்தக்கடை பகுதியில் இருந்த ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த பழனி (45) என்ற யாசகரிடம் மது அருந்த 50 ரூபாய் கேட்டு தர மறுத்த நிலையில் அவரையும் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். இதையடுத்து இதுகுறித்து தகவல் அறிந்த ஒத்தக்கடை காவல்துறையினரால் சதிஷ்குமார் கைது செய்யப்பட்டார்.

மது அருந்துவதற்காக 80 ரூபாய்க்காக இருவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.