முக்கியச் செய்திகள் சினிமா

சோழனின் பெருமையைப் பாடும் “பொன்னியின் செல்வன்” படத்தின் புதிய பாடல்

“பொன்னி நதி” பாடல் மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் சோழனின் பெருமையைப் பாடும் புதிய பாடல் வெளியாக உள்ளது.

மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வனில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, சுந்தர சோழனாக பிரகாஷ்ராஜ், வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் நடிக்கிறார். மேலும், ஐஸ்வர்யா லட்சுமி பூங்குழலியாகவும், ஷோபிதா வானதியாகவும், சரத்குமார் பெரிய பழுவேட்டரையராகவும் மற்றும் பார்த்திபன் சின்னப் பழுவேட்டரையராகவும் நடித்திருக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை லைகா புரொடெக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இரு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் இப்படத்திலிருந்து “சோழா சோழா” என்னும் இரண்டாவது பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. இளங்கோ கிருஷ்ணன் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலைச் சத்திய பிரகாஷ், நகுல் அபயங்கர், விஎம் மகாலிங்கம் ஆகியோர் பாடியுள்ளனர்.ஆதித்த கரிகாலனின் புகழையும் அவன் வீரத்தையும் கூறும் விதமாக இப்பாடல் உருவாகியுள்ளது. இப்படத்திலிருந்து வெளியான டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில் அதன் பின் வெளியான “பொன்னி நதி” பாடல் மாபெரும் வரவேற்பைப் பெற்று யூடியூபில் 1.5 கோடி பார்வைகளை கடந்துள்ளது. அதேபோல் “சோழா சோழா” பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்திய பொருளாதாரத்தை அச்சுறுத்தும் அமேசான், கூகுள் பரிவர்த்தனைகள்: ரிசர்வ் வங்கி

Vandhana

கோடை வெப்பம் – பள்ளி நேரங்களை மாற்றியமைக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

EZHILARASAN D

குஜராத், இமாச்சலில் விஐபி வேட்பாளர்கள் நிலை என்ன?

G SaravanaKumar