புதிய சாதனை படைத்த அரபிக் குத்து பாடல்

தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்து வருகிறது. நடிகர் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்து…

தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்து வருகிறது.

நடிகர் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வெளியான திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான இந்த படம் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. திரைக்கதையை தாண்டி படத்தில் இடம் பெற்ற பாடல்கள் மற்றும் விஜய்யின் புதுவிதமான நடனம் ஹிட் அடித்தது.

அந்த வகையில் பீஸ்ட் படத்தில் இடம் பெற்றுள்ள அரபிக்குத்து பாடல் அனைவரையும் கவர்ந்து செம ஹிட் ஆனது. அனிருத் இசையில் ஜானி மாஸ்டர் இசையமைத்த இந்த பாடலின்  அரபி மொழியிலான வரிகளை  நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். புரியாத வரிகளாக இருந்தாலும் கூட  அனைவரின் உதடுகளிலும் முனுமுனுக்க வைக்கும் பாடலாக மாறியது.

தற்போது அரபிக் குத்து பாடலின் சாதனை குறித்த அப்டேட் ஒன்றை பட குழுவினர் வெளியிட்டனர். பிப்ரவர் 14 காதலர் தினம் அன்று வெளியான அரபிக் குத்து பாடல் வெளியாகி, இன்று வரை யூட்யூப்பில் 250 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அரபிக்குத்து காம்போவை வைத்து அனிரூத்- ஜோனிடா கூட்டணியில் அடுத்தடுத்து பல பாடல்கள் வந்தாலும் அரபிக் குத்து பாடலுக்கு கிடைத்த அமோக வெற்றி மற்ற பாடல்களுக்கு கிடைக்கவில்லை.

உலக அளவில் டிரெண்ட் ஆகி வரும் அரபிக் குத்து பாடலை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்சியை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.