நாடு முழுவதும் இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் குழந்தகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “அனைத்துக் குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குழந்தைகள் மகிழ்ச்சியாக வாழும் நாடே, வளமான நாடு. குழந்தைகளின் கனவுகளுக்கும், திறமைகளுக்கும் ஊக்கமளித்து, அச்சமின்றி மகிழ்ச்சியாக வளர வழிவகுப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.
ஒவ்வொரு குழந்தைக்கும் அன்பும், பாதுகாப்பும், தரமான கல்வியும், விளையாடுவதற்கான வாய்ப்பும் சமமாகக் கிடைப்பதை உறுதி செய்வோம்”என்று அவர் தெரிவித்துள்ளார்.




