திருவள்ளூரில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம கும்பல் – ஒருவர் உயிரிழப்பு!

 பேரம்பாக்கம் பகுதியில் 3 பேர் மீது நாட்டு வெடி குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் காந்திநகர் பகுதியில் முகேஷ், தீபன், ஜாவித் ஆகிய 3 பேரும் ஒரு இடத்தில நின்று பேசி கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டு மீது வீசியதில் முகேஷ் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து மர்ம கும்பல் தீபன், ஜாவித் இருவரையும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர். இதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் தீபன் என்பவருக்கு வெடிகுண்டு பட்டதில் கை தோல்பட்டையில் பலத்த காயம் ஏற்ப்பட்டது. மற்றொருவருக்கு தலையில் வெட்டு காயங்கள் ஏற்பட்டது. இதை பார்த்த அப்பகுதியினர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது மருத்துவமனை செல்லும் வழியில் முகேஷ் என்பவர் உயிரிழந்துள்ளார். மீதமுள்ள இரண்டு பேரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த மப்பேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.