முக்கியச் செய்திகள் தமிழகம்

மின்சாரம் தாக்கிய மகளை காப்பாற்றச் சென்ற தாயும் உயிரிழப்பு

கோவை துடியலூர் அருகே குளியலறையில் மின்சாரம் தாக்கி துடிதுடித்த மகளை
காப்பாற்றச்சென்ற தாயும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை
ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் துடியலூர் அருகே விஸ்வநாதபுரம் மீனாட்சி கார்டன் பகுதியில்
வசிப்பவர் ஆனந்த். இவர் திருச்சியில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். கோவையில் உள்ள வீட்டில் அவரது மனைவி கார்த்திகா(52) மற்றும் மகள்
அர்ச்சனா(18) ஆகியோர் வசித்து வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அர்ச்சனா தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை அர்ச்சனா கல்லூரி செல்வதற்கு குளிப்பதற்காக குளியலறைக்கு சென்றுள்ளார். அப்போது வாட்டர் ஹீட்டரில் ஏற்பட்ட பழுது காரணமாக அருகிலிருந்த தண்ணீரில் மின்சாரம் பரவியுள்ளது. குளிக்கச் சென்ற அர்ச்சனா தண்ணீரைத் தொட்டதும் அவரை மின்சாரம் தாக்கியுள்ளது.

துடிதுடித்த அர்ச்சனாவின் அலறல் சத்தம் கேட்டு சமையலறையிலிருந்த கார்த்திகா, தனது மகளை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கார்த்திகாவையும்
மின்சாரம் தாக்கியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அர்ச்சனாவை கல்லூரிக்கு அழைத்துச் செல்ல கால் டாக்ஸி ஓட்டுநர் வந்துள்ளார். அவர் வீட்டின் காலிங்பெல் மற்றும் செல்போன் மூலம் அழைத்தும், எந்த பதிலும் வராததால், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது குளியலறையில் தாய் கார்த்திகாவும், மகள் அர்ச்சனாவும் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

மின்சாரத்தை துண்டித்த அவர்கள், இச்சம்பவம் குறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துடியலூர் போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளியலறையில் மின்சாரம் தாக்கி தாய் மற்றும் மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திருச்சியில் இன்று திமுகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்; லட்சிய பிரகடனத்தை வெளியிடுகிறார் ஸ்டாலின்

G SaravanaKumar

குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர்; டி.ராஜா முன்வைக்கும் கோரிக்கை

EZHILARASAN D

‘அக்னிபாத்’ – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கேவியட் மனுத்தாக்கல்

Halley Karthik