தனது தந்தை குறித்து உண்மைக்குப் புறம்பான தகவல்களை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததால், அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமியின் மகன் சதீஸ்குமார் ஓ.பி.எஸ். ஆதரவாளர் கோவை செல்வராஜுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் அண்மையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், கே.பி.முனுசாமி திமுகவுடன் தொடர்பில் உள்ளார். திமுக அரசின் தயவோடு அரசு நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளார் என கே.பி.முனுசாமி குறித்து தெரிவித்திருந்தார். மேலும் திமுகவின் கைக்கூலியாகவும், அடியாளாகவும் கே.பி.முனுசாமி செயல்படுவதாக குற்றம்சாட்டியிருந்தார். இவரது பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், கேபி.முனுசாமியின் மகன் சதீஷ்குமார் கோவை செல்வராஜுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதில், கோவை செல்வராஜின் இந்த பேச்சு, கே.பி.முனுசாமியின் நற்பெயருக்கு களங்கள் விளைவிக்கும் வகையில் உள்ளது. இதனால் கே.பி.முனுசாமி மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறார். கோவை செல்வராஜ் மீண்டும் செய்தியாளர் சந்திப்பு நடத்தி தான் கூறிய தவறான கருத்துகளுக்கு பகீரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். நஷ்ட ஈடாக 15 நாட்களுக்குள் ஒரு கோடி வழங்க வேண்டும் என கே.பி
முனுசாமியின் மகன் கோவை செல்வராஜுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
-ம.பவித்ரா