இந்தியாவைப் போல் அமெரிக்காவிலும் வட்டி விகிதம் உயர்வு

அமெரிக்காவின் மத்திய வங்கி அதன் வட்டி விகிதத்தினை தொடர்ந்து மூன்றாவது முறையாக உயர்த்தியுள்ளது. கடந்த 2008ம் ஆண்டுக்கு பிறகு அதிகரிக்கப்பட்ட அதிகமான வட்டி விகிதம் இதுவாகும். இந்திய நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும்…

அமெரிக்காவின் மத்திய வங்கி அதன் வட்டி விகிதத்தினை தொடர்ந்து மூன்றாவது முறையாக உயர்த்தியுள்ளது. கடந்த 2008ம் ஆண்டுக்கு பிறகு அதிகரிக்கப்பட்ட அதிகமான வட்டி விகிதம் இதுவாகும்.

இந்திய நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கியானது கடனுக்கான வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. அதேபோல் அமெரிக்க நாட்டிலும் வரலாறு காணாத பொருளாதார பாதிப்புகளை சந்தித்து வருகிறது. அதனால் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்தி வருகிறது.

கொரோனா பெருந்தொற்று வந்து ஏறக்குறைய குறைந்து கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. ஆனாலும் அதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா நாட்டின் மத்திய வங்கியான அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் ,
கடனுக்கான வட்டி விகிதத்தை 75 புள்ளிகள் உயர்த்தப்படுகிறது என அறிவித்துள்ளது. நடப்பாண்டில் நடைபெற்ற ஃபெடரல் ரிசர்வ் கூட்டங்களில் 3 வது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முந்தைய வட்டி விகிதம் உயர்வால் பொருளாதார மறுமலர்ச்சி ஏற்படவில்லை. ஏற்கனவே நெருக்கடியில் சிக்கியுள்ள சர்வதேச பொருளாதாரம் அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்வு என்ற அறிவிப்பால் மீண்டும் பணவீக்க விகிதம் குறையுமா ? விலைவாசி குறையுமா என அடுத்து வரும் மாதங்களில் தெரிய வரும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். மேலும் நடப்பாண்டில் வரவிருக்கும் அடுத்த இரு கூட்டங்களிலும் வட்டி விகித உயர்வு இருக்கும் எனவும் கணிக்கின்றனர்

ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவரின் அறிக்கை படி, ஃபெடரல் ரிசர்வ் நாட்டில் பெருகிவரும் பணவீக்க விகிதத்தை குறைத்து, பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க செயல்படுகின்றது. ஆகவே வட்டி விகிதம் உயர்த்தப்படுகிறது என அறிவித்துள்ளது.

தற்போதைய வட்டி விகிதமானது, 2008 ம் ஆம் ஆண்டில் ஏற்பட்ட உலக பொருளாதார சரிவின் போது இருந்த நிலையில் உள்ளது எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதம் உயர்வு அறிவிப்பு வரும் நாட்களில்
உலக நாடுகளின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரா.தங்கபாண்டியன், நியூஸ் 7 தமிழ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.