கடலூரில் மனைவியின் ஆசையை நிறைவேற்ற கப்பல் போன்று வீட்டினை கட்டிய மரைன்
இன்ஜினியர்; கப்பலில் இருக்கும் வசதிகளை வீடுகளுக்குள் கொண்டு வந்து
அசத்தியுள்ளார்.
கடலூரைச் சேர்ந்தவர் சுபாஷ், இவர் கடந்த 15 ஆண்டுகளாக மறைன் இன்ஜினியராக
பணியாற்றி வருகிறார். கார்கோ ஷிப் எனப்படும் சரக்கு கப்பலில் இவரது பணி
இருப்பதால் வருடத்தில் பாதி நாட்களுக்கு மேல் இவர் கடலிலேயே செலவு செய்து
வருகிறார். பல்வேறு நாடுகளுக்கும் இவரது பயணம் இருக்கும் நிலையில் இவரது மனைவி
என்னையும் கப்பலுக்கு அழைத்துச் செல்லுங்கள் என கூறியுள்ளார். நான் பணிபுரிவது
சரக்கு கப்பல் என்பதால் அதில் அழைத்துச் செல்வது கடினம் என இவர் கூறியுள்ள
நிலையில் மனைவியின் ஆசையை நிறைவேற்றும் விதமாக கப்பல் மாதிரி வீடு கட்ட முடிவு செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சில பெரிய வீடுகளை கப்பல் மாதிரி கட்டி உள்ளார் என்று கூறுவது
வழக்கம். ஆனால் இவர் கடலூர் வண்ணாரப்பாளையம் பகுதியில் 11,000 சதுர அடியில்
ஒரு இடத்தினை வாங்கி அதில் 4,000 சதுர அடியில் கப்பல் போன்ற வடிவமைப்பில்
வீட்டினை கட்டத் துவங்கினார். கடந்த 2 ஆண்டு காலம் இந்த பணிகள் நடந்து வந்த
நிலையில் தற்போது அந்த பணிகள் முடிவடைந்து அந்த வீட்டிற்கு புதுமனை புகுவிழா
நடத்தினார் சுபாஷ்.
பிரம்மாண்ட கப்பல் போன்று தோற்றம் உள்ள இந்த வீட்டினை
சுற்றி தண்ணீர் நிற்கும் விதமாக வழிவகை செய்துள்ளார்.அதன் பிறகு இந்த
வீட்டிற்குள் சென்றவுடன் கப்பலில் இருப்பது போன்று படிக்கட்டுகள் அமைத்து அதன்
வழியாக ஆறு அறைகளை கட்டி இந்த வீட்டினை பிரம்மாண்டப்படுத்தியுள்ளார்.மேலும்
நீச்சல் குளம், வீட்டில் உடற்பயிற்சி கூடம் என தனித்தனியாக அறைகள்
ஒதுக்கியும், நன்கு காற்றோட்டம் வீட்டிற்குள் வரும் விதமாகவும், கப்பல்
கேப்டன் அமர்ந்து கப்பலை செலுத்தும் விதமாக இருப்பது போன்று ஒரு அறை
அமைத்து அதன் வழியாக வெளியிடங்களையும் பார்ப்பதற்கான வழிவகைகளை செய்துள்ளார்.
இது மட்டுமல்ல இரவு நேரங்களில் இந்த வீட்டினை பார்க்கும் பொழுது ஒரு கப்பல்
தண்ணீரில் செல்வது போன்று தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாகவும் மின்னொளிகள்
அமைத்தும் வீட்டை கட்டியுள்ளார்.மேலும் இவரது குடும்பத்தின் அழைப்பினை S4
குடும்பம் உங்களை வரவேற்கிறது என அவர் பல்வேறு இடங்களிலும் பேனர்களை வைத்தார்.
S4 என்றால் என்ன என்று கேட்கும் போது அது ஒரு குறியீடு என்றும் எங்கள்
குடும்பத்தில் மனைவி நான் மற்றும் இரண்டு மகள்கள் என அனைவருக்கும் முதலெழுத்து
எஸ் என்ற எழுத்தில் ஆரம்பிப்பதால் S4 குடும்பம் என எங்களை நாங்கள் அழைத்துக்
கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.