கடலில் பேனா சின்னம் வைப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

சென்னை மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் வைப்பதற்கு எதிராக மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை மெரினா கடலில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக  ரூ.81…

சென்னை மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் வைப்பதற்கு எதிராக மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை மெரினா கடலில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக  ரூ.81 கோடியில் ‘‘பேனா‘‘ சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.  இந்த சின்னம் அமைப்பது கடலோர ஒழுங்குமுறை மண்டலத்துக்குள் வருவதால் கடல் வளமும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுவதாக இத்திட்டத்திற்கு மீனவர்கள் அமைப்பு தடை விதிக்ககோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதே போல் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும், கடற்கரையோரங்களில் கட்டுமானங்கள் அமைக்க தடை விதிக்க வேண்டும், அதேபோல் சென்னை மெரினா கடலில் பேனா வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே. ரமேஷ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் 134 அடி உயரத்துக்கு சின்னம் அமைப்பது கடலோரோ ஒழுங்கு முறை மண்டல விதிகள் அனைத்தையும் மீறிய நடவடிக்கை எனவும், இந்த நினைவு கட்டிடத்தின் கட்டுமான காலகட்டத்தில் கடலில் பல மாற்றங்கள்  நிகழும். எனவே இத்திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார். மேலும்  கடல் அரிப்பை தடுக்க கடற்கரை ஓரங்களில் மரம் நடுவதற்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற கடலோர மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
-அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.