சந்தேகத்திற்கு இடமாக ரூ.1கோடி பணத்துடன் சுற்றிய ஆந்திராவைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை யானைகவுனி பகுதியில் இன்று காலை போலீசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது ரூ. 1 கோடி பணம் சிக்கியது.
ஆந்திராவைச் சேர்ந்த ஒரு நபர் ரூ.1 கோடி பணத்துடன் யானைகவுனி பகுதிக்கு வந்துள்ளார். சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரது பையை சோதனையை செய்த போது ரூ. 1 கோடி பணம் ரொக்கமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அவரிடம் அந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து ஆந்திராவைச் சேர்ந்தவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.
உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அவரிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.







