மானாமதுரை அருகே யூக்கலிப்டஸ் மரங்களை ஏற்றி வந்த லாரி நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சிவகங்கை மாவட்டம் , மானாமதுரை வழியாக செல்லும் திருச்சி – ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் குமார் என்பவர், புதுக்கோட்டையிலிருந்து யூக்கலிப்டஸ் மரங்களை ஏற்றிக்கொண்டு வந்தார். மானாமதுரை சிப்காட் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில், ஓட்டுநர் குமார் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். லாரியில் ஏற்றி வந்த மரங்கள் அனைத்தும் நெடுஞ்சாலையில் சிதறியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் காவல்துறையினர், தடுப்பு அமைத்து போக்குவரத்தை சரி செய்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
– கு.பாலமுருகன்