மாசிமக திருவிழாவை முன்னிட்டு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மார்ச் 7ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மாசிமக திருவிழா வரும் 6 மற்றும் 7ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில், 6ஆம் தேதி திருக்காஞ்சியிலும், 7ஆம் தேதி வைத்திக்குப்பத்திலும் நடைபெறுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்க: திமுக பெற்ற வெற்றி வழங்கப்பட்டதல்ல, வாங்கப்பட்டது: டிடிவி தினகரன்
மாசிமக திருவிழாவை முன்னிட்டு வருகின்ற 7ஆம் தேதி செவ்வாய்க்கிழமை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேல்நிலை வகுப்புகளுக்கான செய்முறை பொதுத்தேர்வுகள் திட்டமிட்டடபடி நடைபெறும் என புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
-ம.பவித்ரா