முக்கியச் செய்திகள் தமிழகம்

ஐயப்பன் கோயிலுக்கு சென்றவர் வாங்கிய லாட்டரியில் ரூ.80 லட்சம்; பரிசு வென்றவரை தேடி அலையும் லாட்டரி கடைக்காரர்

தென்காசியில் இருந்து சேர்ந்தவருக்கு லாட்டரி சீட்டில் முதல் பரிசான ரூ.80 லட்சம் கிடைத்துள்ள நிலையில், பரிசை வென்ற ஐய்யப்ப பக்தரை கேரளா லாட்டரி கடை உரிமையாளர் தேடிவருகிறர்.

தமிழகத்தில் லாட்டரி சீட் விற்பனையானது தடை செய்யப்பட்டுள்ள சூழலில், அண்டை
மாநிலமான கேரளாவில் லாட்டரி சீட் விற்பனையானது கேரளா அரசால்
அங்கீகரிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது இந்த சூழலில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமானோர் கேரளாவிற்கு செல்லும்போது, அங்கு உள்ள லாட்டரி சீட்டுகளை வாங்குவது வழக்கம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த வகையில், தற்போது ஏராளமான ஐய்யப்ப பக்தர்கள் சபரிமலை ஐய்யப்பன்
கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து சாமி தரிசனம்
செய்வதற்காக சென்று வருகின்றனர்.

அப்படி, தமிழகத்தில் இருந்து சபரிமலை நோக்கி சென்ற ஐய்யப்ப பக்தர் ஒருவர்
தென்காசி மாவட்டம் தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள ஆரியங்காவு பகுதியில்
செயல்பட்டு வரும் ஒரு லாட்டரி கடையில் காருண்யா என்று அழைக்கப்படக்கூடிய ஒரு
லாட்டரி சீட்டை வாங்கி சென்றுள்ளார் நேற்று முன்தினம் லாட்டரி சீட்டு வாங்கிய
அவருக்கு ரூபாய் 80 லட்சம் முதல் பரிசு அடித்துள்ளது.

ஆனால், கோவிலுக்கு சென்ற அந்த ஐய்யப்ப பக்தர் இதுவரை தனது லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்ததா?இல்லையா? என்பது குறித்து லாட்டரி சீட்டை பார்க்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், முதல் பரிசான ரூ.80 லட்சத்திற்கு உரிமை கோரி யாரும் வரவில்லை என கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, அந்த லாட்டரி சீட்டை விற்பனை செய்த கடையின் உரிமையாளர் தனது கடையில் இருந்த லாட்டரி சீட்டுக்கு தான் ரூ.80 லட்சம் முதல் பரிசு விழுந்துள்ளதாகவும், அதனை ஒரு ஐய்யப்ப பக்தர் ஒருவர் தான் வாங்கி சென்றதாகவும், அந்த முதல் பரிசு வென்ற அந்த லாட்டரி சீட்டை வைத்திருக்கும் ஐய்யப்ப பக்தரை தான் தேடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: சட்டமன்ற உறுப்பினர், தனியார் நிறுவன ஊழியர்கள் உறுதிமொழியேற்பு..!

Web Editor

சிஸ்டம் தோல்வியடைந்து விட்டதால், மக்களின் குரல்தான் முக்கியம்: ராகுல் காந்தி!

EZHILARASAN D

உயிரிழப்புக்கு முயன்ற 8 மாத கர்ப்பிணி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Halley Karthik