டெல்லியில் பிடெக் படித்த பெண் ஒருவர் புல்லட்டில் பானிபூரி விற்பனை செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். ஒருசமயத்தில் ஒரு ஊரில் ஒரு என்ஜினியர் இருந்த காலம் மாறி இப்போது வீட்டுக்கு ஒரு என்ஜினியர்கள் இருக்கிறார்கள். அதனாலேயோ என்னவோ இப்போது உள்ள காலகட்டத்தில் வேலை கிடைப்பதும் குதிரைகொம்பாய் மாறி விட்டது.
இதையும் படிக்கவும்: ஆரஞ்சுகளை அசால்ட்டாக அடுக்கி வைக்கும் பெண்! வைரலாகும் வீடியோ
இதனால் பலரும் படித்த துறைக்கு சம்பந்தம் இல்லாத ஏதோ ஒரு துறையில் தான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். சிலர் சொந்தமாக தொழில் தொடங்கி பலருக்கு வேலை கொடுக்கிறார்கள். அந்த வகையில், டெல்லியில் உபாத்யாய் என்ற பெண், பிடெக் படித்து விட்டு தற்போது பானிபூரி விற்பனை செய்து வருகிறார். அவர் தனது ராயல் என்பீல்டு புல்லட்டில் டெல்லி திலக்நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பானி பூரி விற்பனை செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 5 மில்லியன் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.
இதுகுறித்து உபாத்யாய் கூறுகையில், இது பெண்களுக்கு உகந்த வேலை அல்ல. ஆனால் அதுப்பற்றி எனக்கு கவலை இல்லை. இந்த பானிபூரி பொரிப்பதற்கு மோசமான எண்ணெய் பயன்படுத்துவது இல்லை. பானிபூரி மிகவும் ஆரோக்கியமான முறையில் தயாரிக்கிறேன். பானிபூரி தயாரிக்க மைதா மாவு பயன்படுத்துவது இல்லை.
மேலும் கொத்தமல்லி இலை மற்றும் சீரகம் ஆகியவற்றை அரைத்து, அதில் தண்ணீர் கலந்து ஆர்கானிக் முறையில் சட்னியாக கொடுக்கிறேன். மேலும் பானிபூரியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் போது சிறிது வெல்லம் மற்றும் புளி கலந்த கரைசலை ஊற்றி அதன் பிறகு சட்னியை ஊற்றி வழங்குவேன். இது ஒருவிதமான வித்தியாசமான சுவையாக இருக்கும் என்று கூறினார்.







