பெண் ஒருவர் அதிவேகமாக ஆரஞ்சு பழங்களை கூடைகளில் நிரப்பும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.
பொதுவாக பெண்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் திறமை உடையவர்களாக இருப்பார்கள். அதிலும் குறிப்பாக காலை வேளைகளில் ஒவ்வொருவரின் வீடுகளிலும் பெண்கள் பம்பரம் போல் சுழன்று கொண்டு பல வேலைகளை செய்து கொண்டிருப்பார்கள். காலை எழுந்து காபி போடுவது முதல் குழந்தைகளை தயார்படுத்தி பள்ளிகளுக்கு அனுப்புவது, கணவனை அலுவலகத்திற்கு அனுப்புவது, தானும் வேலைக்கு செல்வது என சூறாவளி போல் செயல்பட்டு கொண்டிருப்பார்கள்.
அலுவலகங்களில் கூட வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்குவார்கள். ஆனால் குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு வருடத்தில் உள்ள 365 நாட்களும் வேலை நாட்கள் தான். அதிலும் கணவன் மற்றும் குழந்தைகளுக்கு விடுமுறை என்றால் இரட்டிப்பான வேலையாக தான் இருக்கும். அவர்களுக்கு பிடித்த உணவுகளை சமைப்பது, துணிகளை துவைப்பது, வீடு சுத்தம் செய்தல் என்று எப்போதும் பெண்களுக்கு வேலை இருந்து கொண்டே தான் இருக்கும்.
Big respect, that's not an easy job at all. Expertly done🍊👏🏼 pic.twitter.com/pAg4i5L60P
— HOW THINGS WORK (@HowThingsWork_) March 7, 2023
தற்போது அதே போன்ற ஒரு காணொலி தான் சமூகவலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. ஆரஞ்சு ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ஒருவர் மெஷினில் இருந்து சுத்தம் செய்துவரும் ஆரஞ்சு பழங்களை லாவகமாக கூடைகளில் நிரப்பும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை அதிமானோரால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.







