திருத்துறைப்பூண்டி அருகே ஓடும் பேருந்தின் சக்கரம் உடைந்து விபத்து – 20 மேற்பட்டோர் மருத்துமனையில் அனுமதி.

திருத்துறைப்பூண்டி அருகே அரசு பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த 20 க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்திலிருந்து தொண்டிய காடு பகுதிக்கு…

திருத்துறைப்பூண்டி அருகே அரசு பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த 20 க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்திலிருந்து தொண்டிய காடு பகுதிக்கு செல்லும் மகளிருக்கான இலவச அரசு பேருந்து தபாண்டி என்ற இடத்தில் பேருந்தின் சக்கரம் உடைந்ததில், கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்தது.

பயணிகளின் கூச்சல் சத்தத்தை கேட்ட அப்பகுதியில் உள்ளவர்களும், அவ்வழியாக சென்றவர்களும் கவிழ்ந்து கிடந்த பேருந்தில் சிக்கியவர்களை மீட்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் பேருந்து நடத்துனர், ஓட்டுனர் உட்பட காயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோர், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து இடையூறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.