தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா ஆவார். கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி ஜெயலலிதா மரணம் அடைந்த நிலையில், 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்றார் சசிகலா.
தொடர்ந்து அவர் முதலமைச்சராகவும் தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த சூழலில் அதிமுகவின் நிலைமையில் பல்வேறு மற்றங்கள் ஏற்பட்டிருந்தது. சிறைவாசம் முடிந்து வெளியே வந்த சசிகலா அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில் சமீபத்தில், அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற சசிகலா “தேர்தல் களத்தில் இறங்குவேன்” என்று அறிவித்தார்.
இந்த நிலையில் இன்று சென்னை மெரினாவுக்கு சென்ற சசிகலா அங்குள்ள அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களுக்கு மலர்தாவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டியளித்த, “பசும்பொன்னில் நாளை அம்மா பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன். அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்க இருக்கிறோம். நாளை நடைபெறும் கூடத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும். நாளை நல்ல முடிவை அறிவிக்கிறேன் ” என்று கூறினார்.
சசிகலா அவர்கள், ஜெயலலிதாவின் பிறந்தநாளான நாளை புதிய கட்சி தொடங்க சசிகலா திட்டமிட்டுள்ளதாகவும் விஜயின் தவெகவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.







