சட்டவிரோதமாகக் குற்றம் செய்த கும்பல்

கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதைத் தெரிவிப்பதும், தெரிந்து கொள்வதும் தண்டனைக்குரிய குற்றம் என்று தெரிந்தும் கூட, சட்ட விரோதமாகப் பணம் பெற்றுக்கொண்டு பாலினத்தைத் தெரிவித்திருக்கிறது ஒரு கும்பல். திருப்பத்தூர் மாவட்டம், கதிரம்பட்டி…

கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதைத் தெரிவிப்பதும், தெரிந்து கொள்வதும் தண்டனைக்குரிய குற்றம் என்று தெரிந்தும் கூட, சட்ட விரோதமாகப் பணம் பெற்றுக்கொண்டு பாலினத்தைத் தெரிவித்திருக்கிறது ஒரு கும்பல்.

திருப்பத்தூர் மாவட்டம், கதிரம்பட்டி அருகே காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாகக் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை ஸ்கேன் மூலம் கண்டறிந்து தெரிவிப்பதாகச் சென்னை சுகாதாரத்துறை கண்காணிப்பு குழுவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

அதனடிப்படையில் சென்னை சுகாதாரத் துறை கண்காணிப்பு அதிகாரிகள், கதிரம்பட்டி அருகே மகிமை கனரன் தோட்டம், என்கிற காட்டுப் பகுதியில் ரகசிய ஆய்வு மேற்கொண்டனர். அங்கு ஒரு குடிசையில் 10 பெண்கள் அமர்ந்திருந்தனர். அந்த இடத்தில்தான் ஸ்கேன் மூலம் பாலினம் கண்டறியப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்தனர். பின்னர் அங்கு நடந்த நிகழ்வுகளைக் கண்காணித்து, பாலினம் அறியும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட சுகுமார் மற்றும் வேடியப்பன் ஆகிய 2 பேரை கையும் களவுமாகப் பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் பாலினம் கண்டறிய 8000 ரூபாய் பணம் பெற்றுள்ளதாகவும், ஏற்கனவே இவர்கள் இதே வழக்கில் 4 முறை கைது செய்யப்பட்டு சிறை சென்றவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்த ஸ்கேன் செய்யும் கருவி மற்றும் 75 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.