பெண் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு முயற்சி

அரியலூர் காவல்நிலையத்தில் பணியாற்றும் பெண் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் பெண் எஸ்.ஐ., உயிரிழப்பு முயற்சி ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் போலீஸ்…

அரியலூர் காவல்நிலையத்தில் பணியாற்றும் பெண் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு
முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் பெண் எஸ்.ஐ., உயிரிழப்பு முயற்சி
ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வருபவர் லட்சுமி பிரியா, 30, இவர் கடந்த 5ம் தேதி முதல் 3 நாள் விடுப்பு எடுத்துள்ளார். விடுப்பு முடிந்து மீண்டும் பணிக்கு சென்றபோது உயர் அதிகாரிகளிடம் விடுப்பு கூறாமல் சென்றதாக கூறி அவரை திருச்சியில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளிக்கு செல்ல அதிகாரிகள் கூறியிருக்கதிறார்கள்.

அதனால் மனமுடைந்த லட்சுமி பிரியா வீட்டில் வைத்திருந்த செடி கருகும் பூச்சு மருந்தை தண்ணீரில் கலந்து குடித்துவிட்டு மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமணையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
பெண் எஸ் ஐ உயிரிழப்புக்கு உயர் அதிகாரிகளின் டார்ச்சரால் பெண் எஸ்ஐ உயிரிழப்புக்கு
முயன்றாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இதேபோன்று குவாகம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வரும் பிரியங்கா என்ற பெண் போலீஸ் குடும்ப சூழ்நிலையின் காரணமாக குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்து குடித்து விட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அரியலூர் மாவட்டத்தில் பெண் உதவி ஆய்வாளர் மற்றும் பெண் காவலர் வெவ்வேறு வகையில் விஷம் அருந்திஉயிரிழப்பு முயற்சியில் ஈடுபட்டது அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.