திருச்சி மாவட்டம் முசிறி அருகே நெய்வேலி கிராமத்தில் மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் பூசாரிபட்டி, கோமங்கலம், வெள்ளப்பாறை, உள்ளிட்ட 25 கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே நெய்வேலி கிராமத்தில் மீன்பிடி திருவிழாவானது 1936 ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இந்த ஏரி சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஏரியில் நீர் நிரம்பி அந்த நீரானது குறையும் தருவாயில் மீன்பிடி திருவிழா நடைபெறும். அந்த வகையில். சனிக்கிழமையான நேற்று மீன் பிடி திருவிழாவானது நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பூசாரிபட்டி, கோமங்கலம், வெள்ளப்பாறை, கொல்லப்பட்டி, பெண்ணாம்பட்டி, மேட்டுப்பட்டி, பேரூர், திருத்தலையூர், பொன்னாங்கண்ணி பட்டி, புத்தூர், தண்டலை, திருத்தியமலை, சித்தாம்பூர் உள்ளிட்ட சுமார் 25 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்டு மசுரை, ஆறா, கெளுத்தி, கெண்டை, வாலை, விரால் உள்ளிட்ட மீன்களை மக்கள் ஆர்வமாக பிடித்து சென்றனர்.
இத்திருவிழாவை நெய்வேலி பண்ணக்கார் குழந்தை, கரகமாடி பிச்சை, பெரியசாமி, சின்னராசு லோகநாதன், சின்னசாமி அருண்குமார், சேட்டு ஆகிய ஊர் முக்கியஸ்தர்கள் துண்டை அசைத்து திருவிழாவை துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், துணைத்தலைவர் ரவி மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- பி.ஜேம்ஸ் லிசா