ஜெயிலர் வெற்றிக்குப் பிறகு நடிகர் தனுஷுடன் இணைந்து படம் இயக்க உள்ளதாக குறித்த கேள்விக்கு இயக்குநர் நெல்சன் பதிலளித்துள்ளார்.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களை முழுமையாக பூர்த்தி செய்துள்ளது. முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வரும் ஜெயிலர் படம் மூன்று நாட்கள் முடிவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி ஜெயிலர் திரைப்படம் வெளிவந்து மூன்று நாட்களில் ரூ. 210 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்துள்ளது. இனி வரும் நாட்களில் கண்டிப்பாக எதிர்பார்க்க முடியாத வசூல் சாதனையை ஜெயிலர் படம் செய்யும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜெயிலர் வெற்றிக்குப் பிறகு நடிகர் தனுஷுடன் இணைந்து படம் இயக்க உள்ளதாக குறித்த கேள்விக்கு இயக்குநர் நெல்சன் பதிலளித்துள்ளார். அதில் நெல்சன், “டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் படங்கள் தொடர்ந்து இயக்கியுள்ளேன். கொஞ்சம் நாள்கள் இடைவெளி எடுத்து விட்டு பின்னர்தான் யோசிக்க வேண்டும்.
நடிகர் தனுஷுடன் படம் இன்னும் கமிட் ஆகவில்லை. இணையத்தில் வரும் தகவல்கள் எல்லாம் உண்மையில்லை. இனிமேல்தான் அடுத்தப் படம் குறித்து யோசிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படப்பிடிப்பினை முடித்து தனது 50வது படத்தினை இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.







