நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். இக்கட்சி 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளது. இதனிடையே தூத்துக்குடியை சேர்ந்த தவெக நிர்வாகி அஜிதா என்பவர் காலியாக உள்ள தவெகவின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவியை தனக்கு வழங்க கோரியதாகவும் ஆனால் அவருக்கு அப்பதவி வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அஜிதா இன்று காலையில் பனையூரில் உள்ள தவெகவின் அலுவலகத்தின் முன்பு அவரது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அலுவலகத்திற்கு வந்த தவெக தலைவர் விஜயின் காரை அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மறித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விஜய்யின் பவுன்சர்கள் அவரை தடுத்து அப்புறப்படுத்திய பிறகு விஜயின் கார் கட்சி அலுவலகத்திற்குள் சென்றது.







