தலையிலேயே ஒரு மின்விசிறி ! வைரலாகும் அமிதாப் பச்சன் பகிர்ந்த இன்ஸ்டா வீடியோ

சாலையில் வேகமாக நடந்து செல்லும் ஒருவரின் தலையில் உள்ள குடுமி, அவர் செல்லு வேகத்திற்கு ஏற்றவாறு ஆடும் வீடியோவை நடிகர் அமிதாப்பச்சன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுட்டெரிக்கும்…

சாலையில் வேகமாக நடந்து செல்லும் ஒருவரின் தலையில் உள்ள குடுமி, அவர் செல்லு வேகத்திற்கு ஏற்றவாறு ஆடும் வீடியோவை நடிகர் அமிதாப்பச்சன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுட்டெரிக்கும் கோடை வெயில் நம்மை வாட்டி வதைத்து வருகிறது. இப்போதுதான் மே மாதத்தின் பாதி நாட்களையே நாம் கடந்துள்ள நிலையில், இனி வரும் நாட்கள் எப்படி இருக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் பரிதவித்தும் வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், ரணகளத்திலும் குதூகலம் என்பது போல வெயில் தொடர்பான வேடிக்கை வீடியோக்களும் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் தனது இன்ஸ்டாகிராமில் வேடிக்கையான வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் காக்கி சீருடையில் சாலையில் வேகமாக ஒருவர் நடந்து செல்கிறார். அவரின் தலையில் முடி இல்லை, ஆனால் பின்னால் ஒரு நீண்ட குடுமி உள்ளது. அந்த நபர் எவ்வளவு வேகமாக நடக்கிறாறோ, அவ்வளவு வேகமாக அவரது குடுமியும் ஒரு மின்விசிறி போல சுழல்கிறது. இது கேட்க சாதாரணமாக தோன்றினாலும், பார்க்க நகைச்சுவையாக இருக்கும் இந்த வீடியோவை யாரோ ஒருவர் அவரது வீட்டின் பால்கனியில் இருந்து படம் பிடித்துள்ளார்.

தற்போது இந்த வீடியோவை நடிகர் அமிதாப் பச்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளதோடு “in the heat of the day.. he carries his own fan to cool off ” என்ற வார்த்தையையும் எழுதி பகிர்ந்துள்ளார். இதன் அர்த்தம் ”இந்த கோடை வெயில் வேளையில், இந்த மனிதர் தன்னைக் குளிர்விக்க தனக்கு சொந்தமான விசிறியை தன் கையோடே எடுத்து செல்கிறார் என்பது தான் பொருள். இந்த வீடியோ பகிரப்பட்டது முதலே பலரும் இதை விரும்பி லைக் செய்து வருவதோடு, அதிகளவு பகிரப்பட்டு பலரையும்
கவருந்தும் வருகிறது. அந்த வகையில் இந்த வீடியோவை பார்த்தவரில் ஒருவர், வீடியோவில் வந்தவரை அலாதீனின் ஜீனி என கமெண்ட் செய்திருந்ததோடு, வேறொருவரோ சுயசார்பு இந்தியா பற்றிய கருத்து என கூறி சிரிப்புமூட்டியுள்ளார் .

சமீபத்தில், நடிகர் அமிதாப் பச்சன் தெரியாத நபருடன் பைக்கில் ஹெல்மெட் இல்லாமல் பயணித்த வீடியோ வைரலாகி பலரும் அவரை விமர்சித்து வந்த நிலையில், இந்த வீடியோவை பகிர்ந்து கோவத்தில் இருந்தவர்களை, கூல் செய்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.