வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்; ஆர்வத்துடன் வரவேற்க காத்திருக்கும் ஜப்பான் தமிழ்ச்சங்கத்தினர்…

ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள முதலமைச்சரை மு.க ஸ்டாலினை வரவேற்க ஆர்வத்துடன் காத்திருப்பதாக ஜப்பான் நாட்டின் தமிழ்ச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் மே 23 முதல் ஒருவார காலத்திற்கு ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்குப்…

ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள முதலமைச்சரை மு.க ஸ்டாலினை வரவேற்க ஆர்வத்துடன் காத்திருப்பதாக ஜப்பான் நாட்டின் தமிழ்ச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் மே 23 முதல் ஒருவார காலத்திற்கு ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார். மே 26 ஆம் தேதி ஜப்பான் செல்லும் முதலமைச்சர் 31 ஆம் தேதி வரை அங்கு தங்குகிறார்.

ஒசாகா, டோக்கியோ நகரங்களில் ஜப்பானிய முதலீட்டாளர்களைச் சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கவுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம் சார்பாக நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார் முதலமைச்சர், அதற்கான அழைப்பிதழும் வழங்கப்பட்டுள்ளது.

2006-11 காலகட்டத்தில் மெட்ரோ இரயில் திட்டத்திற்காக ஜப்பான் சென்ற ஸ்டாலின், முதலமைச்சரான பிறகு முதன்முறையாகச் செல்வது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் வருகைக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும், தமிழ்ச்சங்கத்தினர் சார்பாக நிகழ்வுகளுக்கும் ஏற்பாடுகள் செய்துள்ளதாக ஜப்பானைச் சேர்ந்த தமிழ்ச்சங்கத்தினர் நியூஸ் 7 தமிழுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.