சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகள்; நியூஸ் 7 செய்தியாளரிடம் மெட்ரோ நிர்வாக மேலாண் இயக்குநர் ‘சித்திக்’ தெரிவித்த பிரத்யேக தகவல்!

சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகள் குறித்து மெட்ரோ ரயில் நிர்வாக மேலாண் இயக்குநர் சித்திக்வுடன் நியூஸ் 7 செய்தியாளர் தாமரைகனி நடத்திய கலந்துரையாடலை தற்போது பார்க்கலாம்… சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின்…

சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகள் குறித்து மெட்ரோ ரயில் நிர்வாக மேலாண் இயக்குநர் சித்திக்வுடன் நியூஸ் 7 செய்தியாளர் தாமரைகனி நடத்திய கலந்துரையாடலை தற்போது பார்க்கலாம்…

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மூலம் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்கள், சென்னைவாசிகள், போக்குவரத்து நெரிசல் இன்றியும், வேகமாக செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லவும் உதவி வருகிறது. இதில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணித்து பயன் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகள் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக மேலாண் இயக்குநர் சித்திக் கூறுகையில், சென்னை மெட்ரோ ரயிலில் சராசரியாக நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் பயணிகள் பயணிக்கிறார்கள். மெட்ரோ ரயிலில் வருவாய் கூடிய உள்ளது. ஆனால் அதே சமயம் செலவும் அதிகரித்து உள்ளது. மின்சார கட்டணம் 40 சதவீதம் உயர்ந்துள்ளது என கூறினார்.

மேலும், மெட்ரோ ரயில் ஐடியில் வேலை செய்பவர்கள் மட்டுமல்ல அனைத்து பொது மக்களுக்கும் பயன்படுத்தக்கூடிய ஒன்று. அதிகபட்சமாக ஒன்றரை ஆண்டுக்குள் சென்னை மெட்ரோ ரயில் பணிகளால் முடிக்கப்பட்டு அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் சரியாகும். மெட்ரோ ரயில் நிலையங்களில் இருசக்கர வாகனம் 2 நிமிடம் பற்றாக்குரை உள்ளது. அதனை சரி செய்ய அடுக்கு மாடி நிறுத்தும் இடத்தை கட்ட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த முழு செய்தியையும் காணொளியாக காண: 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.