குடிபோதையில் தகராறு செய்த கணவன்; வெட்டிக் கொன்ற மனைவி

மயிலாடுதுறை அருகே மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட கணவனை அரிவாளால் வெட்டிக்கொன்ற மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.  மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே கொற்கை கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவன். இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.…

மயிலாடுதுறை அருகே மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட கணவனை அரிவாளால் வெட்டிக்கொன்ற மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். 

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே கொற்கை கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவன். இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி அமுதா. இவர்களுக்கு ராஜராஜ சோழன் என்ற மகன் உள்ளார். விவசாயி மகாதேவன் குடிப்பழக்கம் உடையவர். இவர் அடிக்கடி குடித்துவிட்டு மனைவி அமுதாவிடம் தகாராறு செய்வது வழக்கம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் வழக்கம் போல் மகாதேவன் நேற்று இரவு குடித்துவிட்டு மனைவி அமுதாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை கண்ட அவரது மகன் தந்தையை விலக்கி விட்டுள்ளார். குடிபோதையில் இருந்த மகாதேவன் ஆத்திரத்தில் மது பாட்டிலை உடைத்து மகன் ராஜராஜ சோழன் வயிறு மற்றும் கை பகுதிகளில் கிழித்துள்ளார்.

தொடர்ந்து மனைவி அமுதாவை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அமுதா அரிவாளை பிடித்து மகாதேவனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மகாதேவன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அமுதாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.