அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் இன்று காலை 8.05 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 அலகுகளாகப் பதிவானது.
முன்னதாக, போர்ட் பிளையரில் இருந்து தென்கிழக்கே 205 கி.மீ தொலைவில் 4.6 என்ற அளவில் நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டது.
இந்நிலையில், மீண்டும் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் போர்ட் பிளையரில் இருந்து தென்கிழக்கே 187 கி.மீ. தொலைவில் 30 கி.மீ. ஆழத்தில்
இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இத்தகவலை நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை முதல் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
நேற்று பிற்பகல் 3.02 மணியளவில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. தலைநகர் போர்ட் பிளேயரில் இருந்து தென்கிழக்கே 256 கி.மீ தொலைவில் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து, பிற்பகல் 3.25 மணிக்கு போர்ட் பிளேயரில் இருந்து தென்கிழக்கே 205 கிமீ தொலைவில் 4.6 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.








