பிளாஸ்டிக் டப்பாவில் தலை மாட்டிக் கொண்ட நாய்! உணவு, தண்ணீர் இன்றி தவிப்பு

ஆரணியில் பிளாஸ்டிக் டப்பாக்குள் தலை மாட்டிக் கொண்ட நாய் ஐந்து தினங்களாக உணவு தண்ணீர் இன்றி தவித்து வருகிறது. இதுகுறித்து புகார் தகவல் தெரிவித்தும் தீயணைப்பு துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள்…

ஆரணியில் பிளாஸ்டிக் டப்பாக்குள் தலை மாட்டிக் கொண்ட நாய் ஐந்து தினங்களாக உணவு தண்ணீர் இன்றி தவித்து வருகிறது. இதுகுறித்து புகார் தகவல் தெரிவித்தும் தீயணைப்பு துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாடியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த குன்னத்தூர் பேருந்து நிலையம் அருகே தெரு நாய் ஒன்று கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு பிளாஸ்டிக் டப்பாக்குள் தலையை விட்டு, தற்போது தலை டப்பாக்கள் சிக்கிக் கொண்டதால் அந்த நாய் ஐந்து தினங்களாக அங்கும் இங்குமாய் ஓடிக்கொண்டு தவியாய் தவித்து வருகிறது.

ஐந்து தினங்களாக அந்த டப்பாவில் தலை சிக்கிய நாய் உணவு இல்லாமல் குடிநீர் இல்லாமல் அலைமோதி உயிர் காக்க போராடிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து
அப்பகுதி மக்கள் ஆரணி தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என பகுதி மக்கள் தெரிவித்தனர்.
பிளாஸ்டிக் டப்பாவில் தலை மாட்டிக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அந்த நாயை காப்பாற்ற தீயணைப்பு வீரர்கள் மற்றும் கால்நடை துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா? என அப்பகுதி மக்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.