தமிழகம் செய்திகள்

அமைச்சரவையில் பங்கு கேட்பது பற்றி தேர்தலுக்குப் பிறகு முடிவெடுக்கப்படும்; பாஜக மாநில தலைவர் எல். முருகன்!

ஆட்சியில் பங்கு கேட்பது பற்றி தேர்தலுக்குப் பிறகு பேசுவோம் என்று பாஜக மாநில தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

பாஜக சார்பில் கொண்டாடப்படும் நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மதுரை வந்தார். விமனநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாகப் போற்றிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வழியில் பாஜக செயல்பட்டுக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தேசியத்தின் மீதும் தெய்வீகத்தின் மீதும் மிகுந்த மதிப்பு கொண்டுள்ள ரஜினி, பாஜகவுக்கு ஆதரவு அளித்தால், அதனை தங்கள் கட்சி வரவேற்கும் என குறிப்பிட்டார். அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால், ஆட்சியில் பாஜக பங்கு கேட்குமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த எல். முருகன், அதுபற்றி தேர்தலுக்குப் பிறகு பேசிக் கொள்வோம் என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வாக்குப்பதிவு இயந்திரங்களை யாராலும் ஹேக் செய்யமுடியாது: சத்யபிரதா சாகு!

எல்.ரேணுகாதேவி

’வார்த்தை ஜாலங்களால் முதலமைச்சர் மக்களை ஏமாற்றி வருகிறார்’-இபிஎஸ்

G SaravanaKumar

தமிழகத்திற்கு வந்தது 3 லட்சம் கோவிஷீல்டு!

EZHILARASAN D

Leave a Reply