கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று நடைபெற்றது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி ஒத்திகை பணிகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆய்வு செய்தார். இதில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹர்ஷ்வர்தன், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். கடந்த ஓராண்டாக மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு அவர்கள் பணியாற்றி வருவதாகவும் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறினார்.







