சிவகார்த்திகேயன் – சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ’பராசக்தி’. இப்படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ல் வெளியாகிது. இதனையொட்டி நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் பேசிய சிவகார்த்தியகேயன்,
“பராசக்தி எனும் பெயரே மிகுந்த வலிமை வாய்ந்தது. அந்த பெயருக்கு தக்கப்படி படமும் அதே அளவு தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த கதைக்கு நான் வந்தது சுவாரஸ்யமானது. கொட்டுகாளி படத்தின் ப்ரீமியர் நிகழ்ச்சிக்கு இயக்குனர் சுதா வந்திருந்தார். அப்போது அவர் எனக்கு ஒரு கதையைச் சொன்னார். பின்னர் இந்த பட ஸ்கிரிப்ட் புத்தகத்தை கொடுத்து படிக்கச் சொன்னார்.அடுத்த நாள், ஸ்கிரிப்ட்டை முழுசா படிச்ச மாதிரி நடிச்சுட்டு போயிருந்தேன். இப்படிதான் படத்துக்குள்ள வந்தேன்.
சுதா ரொம்ப ஸ்ட்ரிக்ட் அப்படின்னு எல்லாரும் எனக்கு நிறைய பில்ட் அப் கொடுத்திருந்தாங்க. அவரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். அதில் மிக முக்கியமானது கடுமையான உழைப்பு மற்றும் முழுமையான அர்ப்பணிப்பு.
ரவிமோகன் பார்த்தவுடன் என் கல்லூரி நாட்கள் நினைவுக்கு வந்தது.அவரின் எம். குமரன் S/O மகாலட்சுமி படத்தில் உடை, ஸ்டைல் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும். தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சுவாமி எவ்வளவு சக்திவாய்ந்த வில்லனாக இருந்தாரோ, அதே மாதிரி பராசக்தியில் ரவி சார் ஒரு மிகப் பவர்ஃபுல் வில்லன் கதாபாத்திரத்தில் வருகிறார்.
நாங்க முதல்ல பராசக்தி படத்தை தீபாவளிக்குத்தான் பிளான் பண்ணோம். அப்புறம் விஜய் அண்ணா படம் அக்டோபர் என சொன்னதும் நாம பொங்கலுக்கு போயிடலாம்னு தயாரிப்பாளரிடம் சொல்லி அதுக்காக பிளான் பண்ணோம். ஆனால், திடீரென ஜன நாயகன் படமும் பொங்கலுக்கு வருதுன்னு சொன்னதும் நான் உடனே ஜெர்க் ஆகிட்டேன். நான் உடனே பராசக்தி பட தயாரிப்பாளருக்கு போன் பண்ணிட்டேன்.
ஜன நாயகன் படமும் பொங்கலுக்கு வருதாமே, நாம எந்த டேட்டுக்கு புஷ் பண்ணலாம்னு கேட்டேன். நம்ம இன்வெஸ்ட்டர்ஸ்க்கு எல்லாம் பொங்கல்னு சொல்லிட்டோம். இதுக்கு மேல புஷ் பண்ணா சம்மருக்குத்தான்னு சொன்னாரு.. மேலும், அப்போ எலக்ஷன் வேற வருது என்றார்.
உடனே நான் விஜயின் மேலாளர் ஜெகதீஷிடன் பேசினேன். அவர், ‘இதுல என்ன ப்ரோ இருக்கு’ என கேட்டார். ‘இல்ல ப்ரோ விஜய் சாரோட கடைசி படம். அவருக்கு ஓகேவான்னு கேளுங்க’ என்றேன். ஒரு 5 நிமிடம் என்று கூறி சென்றார்.
பின்பு திரும்ப லைனுக்கு வந்தாரு. ‘உங்களுக்கு விஜய் வாழ்த்துகள் சொல்ல சொன்னாரு’ என்று கூறினார். விஜய் ஓகே சொல்லிவிட்டார் என்றார். பாராசக்தி வெளியீடு குறித்து நடந்தது இது தான். ஆனால், இதை சிலர் வன்மத்துடனும், சிலர் வியாபரத்துக்காகவும் தவறாக பரப்புகிறார்கள். ஜனவரி 9-ம் தேதி எல்லாரும் ‘ஜனநாயகன்’ படத்தை செலிப்ரேட் பண்ணுங்க. 33 வருஷம் நம்மள எல்லோரையும் என்டர்டெயின் பண்ண ஒருத்தரோட கடைசிப் படம். கண்டிப்பா எல்லோரும் செலிப்ரேட் பண்ணுங்க.
ஜனவரி 10-ம் தேதி ‘பராசக்தி’ படம் வருது, அதையும் செலிப்ரேட் பண்ணுங்க. யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். இது அண்ணன் – தம்பி பொங்கல் தான். என தெரிவித்தார்.







