நெல்லையில் தலைவர் 170 திரைப்பட சூட்டிங்; மகிழ்ச்சியில் ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ…

”தலைவர் 170′  திரைப்பட படப்பிடிப்பு பணிகள் துவங்கி முழு வேகத்தில் நடந்து வரும் நிலையில் அது குறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் ரஜினி நடிப்பில்…

”தலைவர் 170′  திரைப்பட படப்பிடிப்பு பணிகள் துவங்கி முழு வேகத்தில் நடந்து வரும் நிலையில் அது குறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் ரஜினி நடிப்பில் ‘ஜெயிலர்’ படம் வெளியானது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரிலீசான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்டு வசூல் சாதனை படைத்தது. இப்படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து ‘தலைவர் 170’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். ‘ஜெயிலர்’ படத்தின் இமாலய வெற்றிக்கு சமமாக தனது அடுத்த படத்தையும் பிளாக் பஸ்டர் ஹிட்டாக்கி விட வேண்டும் என்ற முனைப்போடு இருக்கிறார் ரஜினிகாந்த்.

‘ஜெயிலர்’ படம் முழுக்க முழுக்க மாஸான கமர்ஷியல் கலவையாக வெளியான நிலையில் ‘தலைவர் 170’ அழுத்தமான கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இப்படத்தின் இயக்குநரான த.செ. ஞானவேலுவின் முந்தைய படைப்பான ‘ஜெய் பீம்’ சமூகத்தில் பலவித அதிர்வலைகளை உண்டு செய்தது. இருளர் பழங்குடியினரின் வாழ்வியல் பற்றி கூறும் விதமாக இப்படத்தை இயக்கி இருந்தார் ஞானவேல்.

இதனையடுத்து தற்போது ரஜினி நடிப்பில் ‘தலைவர் 170’ படத்தினை இயக்கி வருகிறார். அண்மையில் இப்படத்தின் ஷுட்டிங் பூஜையுடன் துவங்கியது. கடந்த வாரம் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பு துவங்கியது. ரெட்ரோ லுக்கில் காரில் வலம் வந்த ரஜினிக்கு ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பு கொடுத்தனர்.

இந்நிலையில் ஒரு வாரத்தில் திருவனந்தபுரம் ஷெட்யூலை முடித்து விட்டு தற்போது நெல்லைக்கு சென்றுள்ளனர் ‘தலைவர் 170’ படக்குழுவினர். அங்கு பணக்குடியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்காக கன்னியாகுமரியில் இருந்து பணக்குடி வந்த நடிகர் ரஜினிக்கும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு வழங்கியுள்ளனர்.

லைகா நிறுவன தயாரிப்பில் உருவாகும் ‘தலைவர் 170’ படத்தை குறுகிய கால இடைவெளியில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இந்தப்படத்தை விரைவில் முடித்து விட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தலைவர் 171’ படத்தில் ரஜினி நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.