பணமதிப்பிழப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கதக்கது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016ம் மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இவற்றை நீதிபதிகள் அப்துல் நசீர், பி.ஆர்.கவாய், போபண்ணா, ராம சுப்பிரமணியம், பி.வி.நாகரத்னா அமர்வு விசாரித்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வெளியானது. அதில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பணமதிப்பிழப்பில் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், “பணமதிப்பு நீக்கம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். பண மதிப்பிழப்பு தொடர்பாக மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே 6 மாதங்களாக ஆலோசனைகள் நடந்தன.
Welcome the Hon'ble Supreme Court's judgement today on Demonetization. A five-judge Constitution Bench (via a 4-1 majority) has upheld the Demonetization after carefully examining the issue & has dismissed several petitions challenging the decision. (1/5)
— Nirmala Sitharaman (@nsitharaman) January 2, 2023
அத்தகைய நடவடிக்கையைக் கொண்டுவர நியாயமான தேவை இருந்தது. மத்திய அரசில் இருந்து முன்மொழியப்பட்டதால் மட்டுமே இந்த முடிவெடுக்கும் செயல்முறை தவறானது என்று கருத முடியாது. பிரிவு 26(2) ஆர்பிஐ சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று நீக்க முடியாது. பொருளாதாரக் கொள்கை விஷயங்களில் மிகுந்த கட்டுப்பாடு இருக்க வேண்டும். நிபுணத்துவத்துடன் இருக்கும் நிர்வாகத்தை நீதிமன்றம் அதன் ஞானத்துடன் மாற்ற முடியாது.
ஆர்பிஐ-ன் ஒப்புதலுக்குப் பிறகு மத்திய அரசின் முடிவு, மையத்தின் அதிகாரங்களுக்கு எதிராக உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பைக் காட்டுகிறது. ஆர்பிஐ சட்டத்தின் கீழ், நாடாளுமன்றத்திற்குப் பதிலளிக்கும் வகையில் மத்திய அரசுக்கு அதிகப்படியான அதிகாரப் பகிர்வு இருப்பதாகக் கூற முடியாது”.
இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி கூட கூறியது: “கறுப்புப் பணம், பயங்கரவாத நிதி மற்றும் கள்ளநோட்டு போன்ற நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் தீமைகளை குறிவைக்க பணமதிப்பு நீக்கம் என்பது நல்ல நோக்கத்தோடும், நன்கு சிந்தித்தும் எடுக்கப்பட்ட முடிவு என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.







