விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்; கிரிக்கெட்டில் இருந்து ஒரு வருடம் ஓய்வு?

கார் விபத்தில் பலத்த காயமடைந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் உடல்நிலை குறித்து சுரேஷ் ரெய்னா மருத்துவரிடம் கேட்டது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  கடந்த டிசம்பர் மாதம்…

கார் விபத்தில் பலத்த காயமடைந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் உடல்நிலை குறித்து சுரேஷ் ரெய்னா மருத்துவரிடம் கேட்டது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதி சாலை விபத்தில் காயமடைந்த ரிஷப் பண்ட் டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த விபத்தில் அவரது தலை, கால் மற்றும் முதுகு பகுதியில் பலத்த ஏற்பட்டது. நெற்றியில் ஏற்பட்ட காயத்திற்கு டெல்லி மருத்துவனையில் பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மருத்துவக் குழு பரிந்துரையின் பேரில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ரிஷப் பண்ட்  நேற்று மாலை 3 நாட்கள் கழித்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வெளியே தனி அறைக்கு கொண்டுவரப்பட்டார். இருப்பினும் அவரது காயங்களுக்கான சிகிச்சை தொடர்ந்து கொண்டிருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

https://twitter.com/StigerOfficial/status/1609961168306864128

இந்த நிலையில் ரிஷப் பண்ட் உடல்நலம் குறித்து, டேராடூன் மருத்துவமனை சிறப்பு மருத்துவரிடம் வீடியோ கால் மூலம் உரையாடிய சுரேஷ் ரெய்னா அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, ரிஷப் பண்ட் எப்போது தயாராவார் என கேட்ட போது, அவருக்கு காலில் ஏற்பட்டுள்ள பலத்த காயம் காரணமாக, அவர் மீண்டும் விளையாட ஒரு வருடம் தேவைப்படலாம் என, மருத்துவர் சுரேஷ் ரெய்னாவிடம் கூறியதாக தெரிகிறது.
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் தற்போது பரவி வருகிறது.

ரிஷப் பண்ட் ஒரு வருடத்திற்கு ஓய்வு பெறுவது குறித்து இந்திய கிரிக்கெட் அணியிடம் இருந்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.