கடலூர் அருகே வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரிய செல்லூர் பகுதியில் உள்ள சாலையோரத்தில் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்று திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளனாது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
லாரி மோதியதை தொடர்ந்து பின்னால் வந்து கொண்டிருந்த 4 வாகனங்களும் தொடர்ந்து மோதியது. இந்த கோர விபத்தில் 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கார் விபத்தில் இறந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த விஜயராகவன் மற்றும் அவரது மனைவி வத்சலா, அவருடைய தாயார் வசந்த லட்சுமி, மகன்கள் விஷ்ணு, அதீர்த் ஆகியோர் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் இவர்களின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் விளாங்குடி. கணவன் மனைவி இருவரும் ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார்கள். கேரளா கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் காஞ்சிபுரம் மாவட்டம் நங்கநல்லூர் செல்லும்போது விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.