முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வன்முறை தூண்டும் வகையில் பேசியதாக சீமான் மீது வழக்குபதிவு

திருச்சியில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள, ராஜீவ்
காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன்,
முருகன் உள்ளிட்ட நான்கு தமிழர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி,
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் திருச்சி ஜங்ஷன் அருகே நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் ஆர்ப்பாட்டமானது பொதுக்கூட்டம் போன்று மேடை அமைத்து நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறையை தூண்டும் வகையிலும் அவதூறாக பேசியதாக சீமான் மீது இந்திய தண்டனைச் சட்டம் ஐபிசி 143 சட்ட விரோதமாக கூடுதல், 153 கலகம் செய்ய தூண்டுதல், 504 அமைதியை சீர் குலைத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சீமான் மற்றும் 500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டெல்லியில் மின்சார மானியம் நிறுத்தம்- அமைச்சர் அதிஷி

Jayasheeba

சிதம்பரத்தில் 14 வயது மகளுக்கு திருமணம் செய்து வைத்த தீட்சிதர்

EZHILARASAN D

எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் இபிஎஸ் ஓபிஎஸ் அஞ்சலி

G SaravanaKumar