முக்கியச் செய்திகள் சினிமா

இன்னும் 5 நாட்களில் திரைக்கு வரும் விடுதலை படம்; வெளியான புது தகவல்!

விடுதலை படத்தைக் குறைந்த பட்ஜெட்டில் திட்டமிட்டதாகவும் ஆனால் படம் எதிர்பார்த்ததை விட அதிக பொருட்செலவை எடுத்துக் கொண்டதாகத் தகவல் வெலியாகியுள்ளது. 

அசுரன் திரைப்படத்திற்குப் பின் விஜய் சேதுபதி, சூரியை வைத்து ‘விடுதலை’யை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு விடுதலை திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த, கதை முழுமையாகச் சினிமா ரசிகர்களைச் சென்றடைய வேண்டும் என்று வெற்றி மாறன் விரும்பியதால் 2 பாகங்களாக இப்படத்தை வெளியிடவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பல புதிய படங்களைத் தயாரித்தும், வெளியிட்டும் வருகிறது. அந்த வகையில் இந்த பாடத்தையும் இன்போடைமெண்ட் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வழங்குகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சத்தியமங்கலம், ஈரோடு உள்ளிட்ட வனப் பகுதிகளில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக விடுதலை படப்பிடிப்பு நடத்தப்பட்டது. வழக்கமாகக் காமெடியனாக நடிக்கும் சூரி, இந்தப் படத்தில் போலீசாகவும், கைதியாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார்.

விடுதலை முதல் பாகத்திற்கான போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளிலும் ஈடுபட்டு வரும் படக்குழு  விடுதலை திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசைவெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்தி முடித்தது. படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் பட்ஜட் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விடுதலை படத்தைக் குறைந்த பட்ஜெட்டில் திட்டமிட்டதாகவும் ஆனால் படம் எதிர்பார்த்ததை விட அதிக பொருட்செலவை எடுத்துக்கொண்டதால் இருதியாக ரூபாய். 40 கோடியில் விடுதலை படத்தைப் படக்குழு முடித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

NDTV நிறுவனத்தை கைப்பற்றுகிறதா அதானி குழுமம்?

Mohan Dass

தனியார் நிறுவன ஊழியர்களை மிரட்டிய திமுக எம்எல்ஏவுக்கு ஓ.பி.எஸ் கண்டனம்

G SaravanaKumar

“ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட் “ – போர் எதிர்ப்பு திரைப்படங்கள் வரிசையில், ரத்தத்தில் எழுதிய ஒரு கவிதை

Yuthi