முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கொல்லங்கோடு தூக்க நேர்ச்சை விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு

கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோயில் தூக்க நேர்ச்சை விழா இன்று வெகுவிமரிசையாக நடந்தது. இதில் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவில் பங்குனி மாத மீன பரணி தூக்க திருவிழா கடந்த 16 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான பச்சிளம் குழந்தைகளின் தூக்க நேர்ச்சை வழிபாடு இன்று நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆண்டு தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இந்த கோவிலில் தூக்க நேர்ச்சை நடத்தப்படுவது வழக்கம். திருமணமாகதவர்கள் திருமண வரன் வேண்டியும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை வரம் கேட்டும் வேண்டியும், அவ்வாறு குழந்தை பாக்கியம் கிடைத்தவர்களும் திருமணம் கைகூடியவர்களும் அவர்களது வேண்டுதலை நிவர்த்தி செய்யும் விதமாக தூக்க நேர்ச்சை நடத்தப்பட்டு வரப்படுகிறது.இந்த ஆண்டு மட்டும் 1,352 பச்சிளம் குழந்தைகளுக்கு நேர்ச்சை நிவர்த்தி செய்யபடும் நிலையில் தூக்கத்தேரில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு வில்களில் நான்கு தூக்ககாரர்கள் அந்தரத்தில் தொங்கயபடி பச்சிளம் குழந்தைகளை தூக்கி சுமந்தபடி தூக்கத்தேர் கோயிலை சுற்றி ஒரு முறை வலம் வர நேர்ச்சை முடித்து வைக்கப்படுகிறது.

இன்று காலையில் துவங்கிய இந்த நேர்ச்சை நாளை காலை வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சபரிமலை கோயிலில் நாளை நடை திறப்பு – 3 வனப்பாதை வழியாக பக்தர்களுக்கு அனுமதி

NAMBIRAJAN

எப்போது மீட்கப்படும் தமிழக கோயில்களில் களவாடப்பட்ட சிலைகள்? – எக்ஸ்குளூசிவ் தகவல்

Jayakarthi

நகர்ப்புற உள்ளாட்சிகளில் இன்று மறைமுக தேர்தல்

Halley Karthik