செல்போன் தர மறுத்த வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

சென்னை வில்லிவாக்கத்தில் செல்போன் தர மறுத்த வாலிபரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  வில்லிவாக்கம் பாலியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி. இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார்…

சென்னை வில்லிவாக்கத்தில் செல்போன் தர மறுத்த வாலிபரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வில்லிவாக்கம் பாலியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி. இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் வாகன ஓட்டுனராக பணிபுரியும் பாலாஜி இன்று காலை 5 மணி அளவில் பணிக்கு செல்வதற்காக வீட்டு வாசலில் தனது டெம்போ ட்ராவலர் வாகனத்தை எடுத்த போது திடீரென அவரை வழிமறித்த இரண்டு வாலிபர்கள் அவரிடம் இருந்து செல்போனை தருமாறு மிரட்டினர். இதற்கு அடிப்பனியாத பாலாஜி செல்போன் தர மறுத்தார்.

இதனால் அந்த வாலிபர்களுக்கும் இவருக்கும் தகராறு ஏற்பட்டது திடீரென அந்த வாலிபர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பாலாஜியை தலை, கழுத்து, வயிறு, ஆகிய பகுதியில் சரமாரியாக வெட்டி செல்போனை பறித்து சென்றனர். இவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த அவரது அப்பா தனசேகர் அலையடித்துக் கொண்டு வெளியே வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்த பாலாஜியை மீட்டு அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து வில்லிவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த சி.சி.டிவி பதிவுகளை பார்த்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். நடுரோட்டில் செல்போனுக்காக வாலிபரை சரமாரியாக வெட்டி சம்பவம் வில்லிவாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.