முக்கியச் செய்திகள் குற்றம்

பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் உயிரிழந்த பரிதாபம்!

நொய்டாவில் 15 வயது சிறுவன் கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நொய்டாவை சேர்ந்த 15 வயது சிறுவன் படிப்பில் ஆர்வம் செலுத்தாது, மொபைலில் கேம் விளையாடுவதில் ஆர்வம் செலுத்தியுள்ளார். இதனை கண்டித்து பலமுறை பெற்றோர்கள் அவரை திட்டியுள்ளனர். ஆனால், பெற்றோரின் வார்த்தைகளை மதிக்காமல் கேம் விளையாடுவதையே பொழுதுப்போக்காக கொண்டிருந்துள்ளார். இதனால், ஒரு கட்டத்தில் கோபம் அதிகரித்த நிலையில் அச்சிறுவனை பொற்றோர்கள் திட்டி அடித்துள்ளனர். இதனையடுத்து, இரவு 8 மணி அளவில் வீட்டைவிட்டு வெளியே சென்ற சிறுவன், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், மகனை தேடி பெற்றோர்கள் இருவரும் சென்றுள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.

புகாரையடுத்து, அச்சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்ட போலீசார், அவரின் உடலை புதிதாக கட்டப்பட்டிருந்த கட்டடத்தின் கீழ் இருந்து கண்டெடுத்துள்ளனர். பின்னர், அவரின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், பெற்றோர் திட்டியதால் வருத்தத்தில், கட்டடம் மேலே இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவித்தனர்.

Advertisement:

Related posts

37 ஆண்டுகளுக்குப் பிறகு ரீமேக்காகும் முந்தானை முடிச்சு படம்!

Niruban Chakkaaravarthi

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

Ezhilarasan

புதுச்சேரியில் ரெம்டெசிவிர் மருந்து இருப்பில் உள்ளது: தமிழிசை சௌந்தரராஜன்

எல்.ரேணுகாதேவி