ஜப்பான் நாட்டின் கோபே நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜப்பான் நாட்டின் கோபே நகரில் 3 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு தீ அடுத்தடுத்து பரவியுள்ளது. மொத்தம் 30 அறைகள் கொண்ட முதல் தளத்தில், அறைகள் முழுவதும் கரும்புகை பரவியுள்ளது.
இந்த சம்பவத்தில் முதல் தளத்தில் வசித்த 8 பேர் சிக்கி கொண்டனர். அவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளனர். 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஓய்வூதியம் பெற்று வருபவர்களும், தினக்கூலி பெறுவோரும் தங்கி இருந்து உள்ளனர். தீ விபத்து பற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.







