ஆட்டுக்குத் தாடி, நாட்டுக்கு கவர்னர் என அண்ணா கூறியிருந்த நிலையில், நாங்கள் தாடியல்ல என மீசையை முறுக்கிய கவர்னர்கள் கதி பரிதாபப்படுமளவு உள்ளதாக திமுக நாளேடான முரசொலி தெரிவித்துள்ளது.
அதுதொடர்பாக முரசொலியில் வெளியாகியுள்ள கட்டுரையில், ‘வரலாற்று அறிவு சிறிதுமின்றி தமிழ்நாட்டு ஆளுநர் ரவி, எவ்வாறு, ‘தமிழ்நாடு’என்ற பெயர் வரலாற்றில் இல்லை; தமிழகம் என்பதுதான் சரி என்று பேசி, தமிழ் மக்களின் தன்மான உணர்வோடு விளையாடினாரோ; அதுபோல மகாராஷ்டிர மக்களின் உணர்வோடு விளையாடினார் அந்த மாநில ஆளுநர் கோஷ்யாரி!
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இரண்டு தினங்களுக்கு முன் ஆளுநர் தமிழிசை, குடியரசு தின விழாவில் ஆற்ற வேண்டிய உரையை இன்னும் தெலுங்கானா அரசு அனுப்பவில்லை எனத் தெரிவிக்க, ஆளும் அரசு, ஆளுநர் தமிழிசை குடியரசு தின விழாவை தனது ஆளுநர் மாளிகையிலேயே கடந்த ஆண்டு போல நடத்திக்கொள்ளட்டும் என “டைம்ஸ் ஆப் இந்தியா’ ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.
“ஆட்டுக்குத் தாடி ; நாட்டுக்கு கவர்னர்” என்றார் பேரறிஞர் – அண்ணா! நாங்கள் தாடியல்ல; என மீசையை முறுக்கிய கவர்னர்கள் கதி பரிதாபப்படுமளவு உள்ளது!
அதிகாரமும், ஒன்றிய அரசின் ஆதரவும் உள்ள வரை தங்களை என்ன செய்ய முடியும் என இறுமாந்திருந்த ஆளுநர்கள் பட்ட அடிகள் மட்டுமல்ல; தமிழ்நாட்டு ஆளுநர் உட்பட பல ஆளுநர்கட்கு உணர்த்தப்பட்ட பாடங்களும் இவை’ என முரசொலி கட்டுரையில் வெளியாகியுள்ளது.