தமிழ் நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் நேற்று முன்தினம் பதவியேற்றார். இதனை தொடர்ந்து அவர் மாநிலத்தின் மூத்த அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் முதலமைச்சர் விஜய் நேற்று முன் தினம் தி.க. தலைவர் கீ. வீரமணியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தொடர்ந்து நேற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மதிமுக பொதுசெயளலர் வைகோ ஆகியோரை அவர் சந்தித்தார்.
இந்த நிலையில் இன்று தமிழ் நாடு முதலமைச்சர் விஜய், ஐயுஎம்எல் கட்சி தலைவர் காதர் மொகிதீனை சந்தித்துள்ளார். சென்னை மண்ணடியில் உள்ள ஐயுஎம்எல் கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது.







