கடையம் அருகே மசாலா வியாபாரி உள்பட 3 மூன்று பேரை கடித்துக் கொதறிய கரடியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்தவர் வைகுண்டமணி. மசாலா வியாபாரம் செய்து வரும் இவர், இன்று காலை வழக்கம்போல் கடையம் அருகேயுள்ள சிவசைலத்தில் இருந்து பெத்தான்பிள்ளை குடியிருப்பு என்ற கிராமத்திற்கு தனது இரு சக்கர வாகனத்தில் வியாபாரத்திற்கு சென்றிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்பொழுது சாலையின் குறுக்கே திடீரென வந்த கரடி, அவரது இருசக்கர வாகனத்தை மறித்து கீழே தள்ளி கடித்து குதறிக் கொண்டிருந்தது. அப்போது அவரின் அலரல் சத்தம் கேட்கவே தகவல் அறிந்த ஊர் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். காப்பாற்ற முயன்ற போது பெத்தான்பிள்ளை குடியிருப்பத்தை சேர்ந்த நாகேந்திரன் மற்றும் சைலப்பன் ஆகியோரையும் கரடி கடித்து குதறியது. இதில் மூன்று பேருக்கும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.
தகவல் அறிந்த கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காயம் பட்டவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அம்பை
அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்திய நிலையில் கரடியை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் துணை இயக்குனர் செண்பக பிரியா உத்தரவின்பேரில், வனத்துறை ஊழியர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பெத்தான் பிள்ளை குடியிருப்பு அருகே பதுங்கி இருந்த கரடியை கண்ட வன ஊழியர்கள் மயக்க ஊசி செலுத்தி கரடியை பிடித்தனர்.
மேலும் கரடி அடர்ந்த வனப்பகுதியில் விட உள்ளதாகவும் திட்டமிட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும், வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 3 பேரை தாக்கிய கரடியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.